யம்மாடி.. திரிஷாவுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே.. குந்தவை கெட்டப்பில் கதிகலங்கவைத்த பிக்பாஸ் நடிகை..!! 



Actress Sanam Shetty Ponniyin selvan Getup

 

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமடைந்தவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் பிக்பாஸிலிருந்து வெளியேறியபின் சில படங்களில் நடித்து வருகிறார். 

shanam shetty

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் இவர், தனது புகைப்படம் மற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து வருவார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உள்ள குந்தவை கதாபாத்திரத்தில் போட்டோசூட் எடுத்து அசத்தியுள்ளார். 

shanam shetty

இது குறித்த போட்டோ இணையத்தில் வைரலாகவே ரசிகர்கள் கலவையான கமெண்ட்களை செய்து வருகின்றனர். அத்துடன் சிலர் இவரது புகைப்படத்தையும், திரிஷாவின் புகைப்படத்தையும் பகிர்ந்து, இதுவும், இதுவும் ஒண்ணா என்று கேட்பது போல கலாய்த்து வருகின்றனர்.