மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண் நண்பர்களுடன் இரவு பார்ட்டிக்கு சென்ற ஷாலு ஷம்மு.. "எட்டு வருட நண்பன் இப்படி பண்ணுவான்னு நினைச்சி கூட பாக்கல" ஷாலு ஷம்முவின் வேதனையான பதிவு..
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து பிரபலமானவர்கள் வெகுசிலரே. அந்த வரிசையில் இருப்பவர் தான் ஷாலு ஷம்மு. வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைபடத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
முதன்முதலில் ஷாலு ஷம்மு, 'தசாவதாரம்' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் நுழைந்தார். இதன்பின், கண்டேன் காதலை, தெகிடி, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், mrலோக்கல், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் ஷாலு ஷம்மு. என்னதான் இவர் பல திரைபடங்களில் நடித்திருந்தாலும் அவ்வபோது இவர் பதிவிடும் புகைப்படம் மற்றும் நடன வீடீயோவை காண்பதற்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கதான் செய்கிறது.
இதுபோன்ற நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஷாலு ஷம்மு இரவு பார்ட்டிக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கிருந்து வீடு திரும்பும் போது அவரது செல் போன் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்து விட்டு திரும்புகையில் அவரது வீட்டிற்கு ஷாலு ஷம்முவின் ஆண் நண்பர் ஒரு பார்சலை அனுப்பி வைத்திருக்கிறார். அதில் அவரது போன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷாலு, அவரது ஆண் நண்பர் இப்பிடி செய்வார் என்று நினைக்கவில்லை என்பதை வேதனையுடன் பதிவு செய்திருந்தார்.