#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தல அஜித் குடும்பத்தில் நடந்த கொண்டாட்டம்! மாடர்ன் உடையில் அடையாளமே தெரியாம ஷாலினி எப்படியிருக்காரு பார்த்தீர்களா!!
நடிகை ஷாலினியின் தங்கையும், தல அஜித்தின் மச்சினிச்சியுமான ஷாமிலி தனது அக்காவுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் அமர்க்களம் படத்தில் நடித்தபோது தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி. குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்த அவர் ஹீரோயினாக அவதாரமெடுத்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது தற்போது ஷாமிலி தெலுங்கில் புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாகவும், தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் வீர சிவாஜி படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் ஷாமிலி தனது பிறந்தநாளை அக்கா ஷாலினி, சகோதரர் ரிஷியுடன் கொண்டாடியுள்ளார். அப்பொழுது ஷாலினி மாடர்ன் உடையில் இருந்துள்ளார். மேலும் ஷாமிலியும் உடல் எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாடர்ன் உடையில் காணப்படுகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.