#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நயன்-விக்கி திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிகர் அஜித்தின் கியூட் மச்சினிச்சி.! வைரலாகும் புகைப்படங்கள்!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக, ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்களை கொண்டு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நயன்தாரா. இவர் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை தீவிரமாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கடந்த ஜூன் 3ந் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
மகாபலிபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் நடிகர் ஷாருக்கான், ரஜினி, கார்த்தி, விக்ரம் பிரபு, அட்லீ, ஜெயம் ரவி தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களும் நேரடியாக கலந்துகொண்டு நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் நடிகை ஷாலினியின் தங்கையும், தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாரான நடிகர் அஜித்தின் மச்சினிச்சி ஷாம்லியும் கலந்துகொண்டுள்ளார். அப்பொழுது அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.