திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்ட திரௌபதி பட நடிகை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தமிழ் சினிமாவில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி படத்தில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையானவர் ஷீலா. இதனைத் தொடர்ந்து இவர் டூலெட், மண்டேலா ஆகிய சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.
சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்திலும் நடித்திருந்தார். மேலும், இவர் நடித்த டூலெட் திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிப்பு பயிற்சியாளரான சோழன் என்பவரை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய திருமண உறவை முறித்துக் கொள்வதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "திருமண உறவில் இருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும், அன்பும் சோழன் என தெரிவித்துள்ளார்.