மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை ஷெரினுக்கு விரைவில் திருமணம்? ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகை ஷெரின் தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகர் தனுசுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார். பின்னர் விசில், உற்சாகம், நண்பேன்டா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வறவேற்பையும் பெற்றார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பேன்டா படத்திற்கு பிறகு இவர்க்கு பட வாய்ப்புகள் அந்த அளவுக்கு கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வெற்றிநடை போடும் குக்வித் கோமாளி ஷோ சீசன் 4ல் போட்டியாளராக கலந்து வருகிறார்.
குக் வித் கோமாளியில் அவருடைய குறும்புத்தனமான பேச்சிலும், தமிழ் பேசும் அழகிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமையலிலும் தனது திறமைகளை வெளிபடுத்தி நடுவர்களிடமும் மற்ற போட்டியாளர்களிடமும் நல்ல பெயரை பெற்று வருகிறார்.
சமூக வளைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாக்ராம் நேரலையில் ரசிகர் ஒருவர் "உங்களுக்கு திருமணம் எப்போது"? என கேட்டார். அதற்க்கு அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறியுள்ளார். "ஜாதகத்தில் எனக்கு இந்த வருடம் அக்டோபர் மாதம் திருமணம் நடக்கும் என கூறியுள்ளனர். ஆனால் இன்ஸ்டாக்ராம் பில்டர் எனக்கு அடுத்த மாதம் திருமணம் என கூறியுள்ளது" எனவே விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.