"பிடிக்கலைனா சொல்லிறனும்., அது பிரன்ஷிப் இல்ல" - விஷால் குறித்து கூறிய தர்ஷிகா.!!
தல ரசிகர்கள் செய்த காரியத்தால் கண்ணீர் விட்ட பிரபல நடிகை.! இதுதான் காரணமா?
பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.
வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் உலகம் முழுவதும் இன்று மிகவும் கோலாகலமாக வெளியானது. மேலும் அதனை ரசிகர்கள் திருவிழாக்களை போல கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதல் நாள் ஷோவை பார்ப்பதற்காக பிரபல திரையரங்கிற்கு சென்றுள்ளார். அங்கு படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவையும், வரவேற்பையும் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டு வெளியேறியுள்ளார்.