மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வானத்தைப் போல தொடரில் இருந்து திடீரென விலகிய முக்கிய நடிகை! செம ஷாக்கான ரசிகர்கள்!!
சன் தொலைக்காட்சியில் காலை தொடங்கி இரவு வரை வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்றுதான் வானத்தைப் போல. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த தொடரில் அண்ணன் சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் குமார் மற்றும் தங்கை துளசி ரோலில் ஸ்வேதா ஆகியோர் நடித்து வந்தனர். இத்தொடரில் தங்கையின் திருமணத்திற்கு பிறகு பல அதிரடித் திருப்பங்களுடன் வானத்தைப்போல தொடர் நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இத்தொடரில் இருந்து துளசி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்வேதா திடீரென விலகியுள்ளார்.
இதுகுறித்து ஸ்வேதாவே தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு சில காரணங்களால் நான் வானத்தை போல தொடரில் இருந்து விலகுகிறேன். இனி ரசிகர்கள் என்னை துளசியாக பார்க்க முடியாது. அது மட்டுமில்லாமல் என்னை துளசியாக ஏற்றுக்கொண்டதற்கு ரொம்ப நன்றி. இதை எப்போதும் நான் மறக்க மாட்டேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.