மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சத்தமின்றி முடிந்த திருமணம்.! அதிதி ராவ்வை கரம்பிடித்தார் நடிகர் சித்தார்த்!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் சித்தார்த். ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வந்த சித்தார்த் கடந்த 2003ம் ஆண்டு மேக்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளிலேயே சித்தார்த் மற்றும் மேக்னா இருவரும் பிரிந்தனர். அதனை தொடர்ந்து படங்களில் செம ஆக்டிவாக நடித்து வந்த நடிகர் சித்தார்த்துக்கு ஸ்ருதிஹாசனுடன் காதல், சமந்தாவுடன் காதல் என பல பேச்சுக்கள் அடிபட்டது.
அதனை தொடர்ந்து கடந்த ஒரு சில காலங்களாக நடிகர் சித்தார்த்தும் நடிகை ஆதிதி ராவ்வும் காதலிப்பதாக தகவல்கள் பரவியது. மேலும் அவர்களும் ஒன்றாக வெளியே செல்வது, புகைப்படங்களை வெளியிடுவது என அதனை உறுதி செய்தனர். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இன்று தெலங்கானாவில் உள்ள வனபர்த்தியில் திருமணம் நடைபெற்றுள்ளதாகவும், சைலண்டாக நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.