திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாய்ப்பே இல்ல.. அவரு மூஞ்சயும்.., அவருகூடலாம் டான்ஸ் ஆட முடியாது - சத்யராஜை கெஞ்சவிட்டு வேடிக்கை பார்த்த கவர்ச்சி நடிகை..!!
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சில்க் சுமிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. அவர் குடும்ப வறுமைக்காக தமிழ்நாட்டிற்கு வந்தவர். பின் நாட்களில் திரைத்துறையில் அறிமுகமாகி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர். இவருக்கு கால்சீட் கிடைத்தால் போதும் என்று பலநாள் காத்திருந்த ஆட்களும் இருக்கின்றனர்.
பல கவர்ச்சி நடிகைகள் தமிழ் திரையுலகில் வந்துசென்றாலும் சில்க் ஸ்மிதா இன்று வரை பலராலும் மறக்க முடியாத இடத்தில் இருக்கிறார். தமிழில் விணுசக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான வண்டிச்சக்கரம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான அவர் சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களால் சுமிதா என்று அழைக்கப்பட்டு சில்க் ஸ்மிதா என்று அடையாளம் காணப்பட்டார்.
இயக்குனர் பாலு மகேந்திரா அவரை திராவிட பேரழகி என்றும் அழைத்து இருந்தார். சில்க் ஸ்மிதாவின் நடிப்பில் வெளிப்பட்ட கண்ணசைவு, அந்த குரல் இன்றுவரை எந்த கவர்ச்சி நடிகையாலும் கொண்டுவர இயலவில்லை. சில்க் ஸ்மிதாவிடம் நடிக்க ஆசைப்பட்ட சத்யராஜ் அதற்கான வாய்ப்பை இயக்குனர் மூலமாக ஏற்படுத்தினார்.
ஆனால் சில்க் ஸ்மிதாவோ சத்யராஜ் மூஞ்சயும்., உயரத்தையும் பாருங்க என கூறி இருக்கிறார். அவருடன் என்னால் நடிக்க இயலாது என்று மறுத்து பின்னாட்களில் சத்யராஜ் கெஞ்சியதால் வற்புறுத்தல் காரணமாக டான்ஸ் ஆட ஒப்புக்கொண்ட நிலையில், சத்யராஜுடன் பழகி அவரின் குணத்தை அறிந்துகொண்ட சில்க் ஸ்மிதா நல்ல மனிதரை இப்படி நினைத்துவிட்டோமே என்று கூறியதாக பத்திரிக்கையாளர் சபீதா ஜோசப் தகவல் தெரிவித்துள்ளார்.