மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. பாத்துக்கிட்டே இருக்கலாமே.! பளிச்சென மெழுகு சிலைபோல ஜொலிக்கும் நடிகை சினேகா.! கியூட் கிளிக்ஸ் இதோ!!
தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சினேகா. இவர் என்னவளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர் தொடர்ந்து அஜித், கமல், விஜய், சூர்யா, விக்ரம் என பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற அழகிய மகளும் உள்ளனர். சினேகா தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான ரோல்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் வலைதளங்களில் செம ஆகட்டிவாக இருந்து வரும் அவர் அவ்வப்போது விதவிதமான உடைகளில் போட்டோ சூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போதும் புடவையில் மெழுகு சிலை போல இருக்கும் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்து வருகிறது.