திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகை ஸ்னேகாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? வெளியான புதிய தகவல்!!
தமிழ் சினிமாவில் கமல், அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இவரை புன்னகை இளவரசி என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.
சினேகா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சிறிது காலம் சினிமாவிற்கு இடைவெளிவிட்டிருந்த சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஸ்னேகாவின் முழு சொத்து மதிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஸ்னேகா ஒரு படத்திற்கு சுமார் ரூ. 25 லட்சத்தில் சம்பளம் வாங்குகிறார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.மேலும், நடிகை சினேகா ரூ. 40 கோடி சொத்துக்கு சொந்தக்காரி என்று தகவல் வெளியாகியுள்ளது.