53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அந்த விசயத்திற்கு எப்போது அடிமையானீர்கள்? - ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் ஓபன்டாக் ..!
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து பிரபலமடைந்தவர் உலகநாயகன் கமலஹாசன். இவரின் மூத்தமகள் ஸ்ருதிஹாசன். தொடக்கத்தில் பின்னணி பாடகியாக இருந்த இவர் தற்போது தென்னிந்திய திரையுலகின் பிஸியான நடிகையாக இருக்கிறார்.
இவர் கோலிவுட்டில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். மேலும், தற்போது தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உட்பட பல மொழிகளில் நடித்து வருகிறார்.
அத்துடன் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது போட்டோக்கள் மற்றும் விடீயோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார். மேலும், ரசிகர்களிடம் கேள்விகளையும் கேட்டு பதிலளிப்பார். தற்போது அதுபோன்று Ask me something fun என்று கேட்கும்போது ரசிகர் ஒருவர், நீங்கள் எப்பொழுது முதன்முதலில் கருப்பு நிறத்திற்கு அடிமையானீர்கள்? என்று கேள்வி கேட்டார்.
அதற்கு ஸ்ருதிஹாசன் அவரது சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து, "time for that face tat??" என்று பதிலளித்துள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற உடையணிந்திருந்த ஸ்ருதிஹாசன், கன்னத்தில் டாட்டூ போட்டுள்ளார்.