நான் இப்படியானதுக்கு காரணமே ரஜினி தான் பேட்டியில் மனம் திறந்த சுனேனா



Actress sunena interview

தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருப்பவர் சுனேனா. இவர் தமிழில் நகுல் நடிப்பில் வெளியான 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். முதல் படமே மிகப்பெரிய ஹிட்டாகி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்துள்ளார்.

Sunena

'காதலில் விழுந்தேன்' திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தன. மேலும் மாசிலாமணி, சில்லு கருப்பட்டி, நீர் பறவை போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இப்படங்கள் வெற்றி பெறாததால் அடுத்தடுத்த இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

இதனையடுத்து நீண்ட காலமாக திரைப்படங்களில் நடிக்காமலிருந்த சுனேனா, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது 'ரெஜினா' எனும் திரைபடத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Sunena

இதுபோன்ற நிலையில், சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட சுனேனா, நான் நடிக்க வந்ததற்கு முக்கியகாரணமே ரஜினி சார் தான். 'சந்திரமுகி' படத்துல ரஜினி சார் நடிப்பை பார்த்து தான் எனக்கு நடிப்பில் மீது ஆர்வம் வந்தது என்று கூறியிருக்கிறார். இந்த பேட்டி வைரலாகி வருகிறது.