மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்படிப்போடு.. ஐக்கிய அமீரகத்தில் கோல்டன் விசா பெற்ற நடிகை சன்னி லியோன்.!
ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் பல்துறையிகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக அந்நாட்டின் பொருளாதாரம், சுற்றுலா, நன்மதிப்பு மேம்படுகிறது.
இந்த கோல்டன் விசா பெற்றவர்கள் 10 ஆண்டுகள் அந்நாட்டு குடிமக்களாக, அந்நாட்டு அரசு பதிவேடுகளின் வாயிலாக கருதப்படுவார்கள். இது அங்கு முதலீடு செய்யவும், சொத்துக்களை வாங்கவும் உதவுகிறது.
கடந்த காலங்களில் நடிகர் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், திரிஷா, பாடகி சித்ரா உட்பட பலருக்கும் கோல்டன் விசா ஐக்கிய அரபு அமீரகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது நடிகை சன்னி லியோனுக்கும் அமீரக அரசு சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.