மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கோடி ரூபாய் கொடுத்தாலும் 10 மணிக்கு மேல் இதை பண்ணவே மாட்டேன்" நடிகை டாப்ஸி ஓபன் டாக்.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் டாப்ஸி. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். தமிழில் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான 'ஆடுகளம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரை துறையில் காலடி எடுத்து வைத்தார்.
முதல் படமே மிகப் பெரும் வெற்றியடைந்து தேசிய விருதை பெற்றது. மேலும் இப்படத்தில் நடிகை டாப்சியின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது. இப்படத்திற்கு பின்பு டாப்சி தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிதும் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது.
இது போன்ற நிலையில் டாப்ஸி தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவ்வாறு திரைத்துறையில் பிசியான நடிகையாக இருந்து வரும் டாப்ஸி சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இதனை அடுத்து டாப்ஸி சமீபத்தில் ஒரு சேனலிற்க்கு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில், "எவ்வளவு பணம் கொடுத்தாலும், எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் இரவு 10 மணிக்கு மேல் பார்ட்டியில் கலந்து கொள்ளவே மாட்டேன். எனக்கு போதை பழக்கங்கள் இல்லை என்பதால் பார்ட்டிக்கு சென்று என்ன செய்வது, யாருடன் பேசுவது என்று தெரியாது. மேலும் எனக்கு பார்ட்டியில் கலந்து கொள்வதற்கு விருப்பம் கிடையாது" என்றும் மனம் திறந்து பேசியிருந்தார் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.