#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா! நடிகை தமன்னாவின் புது வீடு இத்தனை கோடியா தலையே சுற்றுகிறதே.!
தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக முன்னணியில் இருந்து வருகிறார் நடிகை தமன்னா. விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் மட்டும் இல்லாது, தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிஸியாக இருக்கும் அவருக்கு ரசிகர்களுக்கு அதிக அளவில் உள்ளனர்.
ஒருசில பாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவியது. தொடர்ந்து பிரபுதேவாவுடன் இணைந்து தேவி படத்தில் நடித்திருந்தார். தேவி முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தேவி 2 படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் தமன்னா. தற்போது, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்திலும், ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மும்பையில், ரூ.16 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். தமன்னா வாங்கிய பிளாட்டானது 22 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்டுள்ளது. ஆனால், தமன்னாவோ 14ஆவது மாடியில் இந்த புதிய வீட்டை வாங்கியுள்ளார். இந்த பிளாட் வசதியுடன் 2 கார் பார்க் பகுதிகளும் கிடைத்துள்ளன. தமன்னா மற்றும் அவரது பாட்டி இருவரும் இணைந்து அந்த புதிய வீட்டை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.