மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நூ காவலயா" பாடல் மூலம் கவர்ச்சி காட்டிய தமன்னா ஜெயிலரில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா.?!
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின்னர் இவரது இயக்கத்தில் டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. கொலை, காமெடி, கடத்தல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு படம் இயக்கி வருபவர் நெல்சன்.
இவரது படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்த ரஜினிகாந்த் இளம் இயக்குனர் நெல்சனுக்கு வாய்ப்பளித்தது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து இருக்கின்ற திரைப்படம் தான் ஜெயிலர் இந்த திரைப்படத்தில் விடிவி கணேஷ், விஜய் வசந்த், விநாயகம், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இதில் நடிகர் மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 10 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் 150 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த படங்களில் ரஜினியின் சம்பளம் உயரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான நூ காவலயா பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. அந்த பிரபல தன்மைக்கு காரணம் தமன்னாவின் திறமை என்று கூறினால் மிகையாகாது. அப்படிப்பட்ட தமன்னா இந்த படத்தில் வாங்கக்கூடிய சம்பளம் 3 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. என்ன தான் உயிரை கொடுத்து நடிகைகள் நடித்தாலும் சம்பள விஷயத்தில் திரையுலகத்தின் பார்வை இனமும் மாறவே இல்லை என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.