திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சொல்ல முடியாத பிரச்சினை.. திடீரென சந்தியாராகம் தொடரில் இருந்து வெளியேறிய நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன், அதிரடி திருப்பங்களுடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு அக்கா-தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பிரபலமடைந்த தொடர் சந்தியா ராகம். இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தாரா.
அவர் தற்போது சந்தியா ராகம் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பாவனா லஸ்யா என்பவர் தனம் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்நிலையில் இதுகுறித்து நடிகை தாரா வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், கனத்த இதயத்துடன் இதை நான் அறிவிக்கிறேன். எதிர்பாராத சூழ்நிலையால் சந்தியா ராகம் தொடரில் இருந்து நான் விலகுகிறேன். என்ன காரணம் என கண்டிப்பாக வெளியே சொல்ல முடியாது என தெரிவித்து சேனல் மற்றும் சீரியல் குழுவிற்கு நன்றி கூறியுள்ளார். மேலும் புதிதாக நடிக்கவிருக்கும் நடிகை லஷ்யாவிற்கும் வாழ்த்து கூறியுள்ளார்.