மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமலின் 234 ஆவது படத்தில் இணைந்த நடிகை திரிஷா... செம குஷியில் ரசிகர்கள்!! வைரலாகும் ட்விட்டர் பதிவு!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவரின் 234-வது படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். இப்படத்தில் மலையாள பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிமுக வீடியோ இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அதனால் இன்று காலை முதலே படத்தின் அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவரான நடிகை திரிஷா இணைந்துள்ளதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.இதனால் ரசிகர்கள் இப்படத்தின் வருகைக்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இச்செய்தி கமல், திரிஷா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
With utmost delight, we greet and welcome the dazzling actor @trishtrashers in our exciting journey#TitleAnnouncementToday5pm #KH234 #Ulaganayagan #KamalHaasan #HBDKamalSir #HBDUlaganayagan@ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @dulQuer @MShenbagamoort3… pic.twitter.com/wMgDpcxPZ2
— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2023