மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
21 ஆண்டுகளுக்கு முன் மிஸ் சென்னை பட்டம் வாங்கிய போது நடிகை த்ரிஷா எப்படி இருந்துள்ளார் பாருங்கள்! வைரல் புகைப்படம்.
21 ஆண்டுகளுக்கு முன் தான் மிஸ் சென்னை பட்டம் வாங்கிய புகைப்படம் ஒன்றினை நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது வரை முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. ஜோடி, மௌனம் பேசியதே ஆகிய படங்களில் துணை நடிகையாக அறிமுகமாகி பின்னர் மனசெல்லாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை திரிஷா.
அதனை அடுத்து விஜய், அஜித், ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது 37 வயதாகும் நடிகை திரிஷா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தான் மிஸ் சென்னை பட்டத்தை வாங்கிய புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள த்ரிஷா, எனது வாழ்க்கையை மாற்றிய மிக முக்கியமான நாள் இன்று என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.