மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனது வாழ்க்கையே மாறிய நாள் இன்று! 21 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ள த்ரிஷா!
இந்த நாள் தான் தனது வாழக்கையை மாற்றிய நாள் என்று கூறி தான் மிஸ் சென்னை பட்டம் வென்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் பிரபல நடிகை திரிஷா.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் திரிஷா. விஜய், அஜித், ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர், தனது 37 வயதிலும் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.
தற்போது ஆடல், பாடல், கவர்ச்சி என்பதையும் தாண்டி, கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து தனி ஒரு நடிகையாகவும் நடிக்க தொடங்கிவிட்டார் த்ரிஷா. 37 வயதிலும் அன்று பார்த்ததுபோலவே இருக்கும் இவருக்கு தற்போதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இன்றுதான் எனது வாழ்க்கை மாறிய நாள் என, தான் மிஸ் சென்னை பட்டம் வாங்கிய புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை த்ரிஷா. இதே நாளில், அதாவது கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்றார்.
தான் மிஸ் சென்னை பட்டம் வென்ற அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா பதிவிட, பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.