மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"திரிஷாவை கட்டிலில் தூக்கிப்போட்டு, ரேப்." மன்சூர் அலிகானால் கொந்தளித்த திரிஷா.!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் லியோ. சமீபத்தில் வெளியாகிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், படத்திற்கான வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
இதில் படத்தில் நடித்த பலரும் கலந்துகொண்டு பட அனுபவம் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் மன்சூர் அலிகான், "ஆரம்பத்தில் நடிகை திரிஷாவுடன் நடிக்கப் போகிறோம் என்பது பற்றி யோசித்து மிகவும் குஷியாக இருந்தேன். ஆனால், அவரை கண்ணிலேயே காட்டவில்லை. விமானத்தில் அழைத்து வந்து விமானத்திலேயே கொண்டு சென்று விட்டனர்."என்று பேசியிருந்தார்.
தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில், "திரிஷாவுடன் நடிக்கும் போது பெட்ரூம் சீன் எல்லாம் இருக்கும் குஷ்பூ மற்றும் ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டது போல திரிஷாவுடன் நடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஏற்கனவே, 150 படங்களில் நான் பண்ணாத ரேப்பா? ஆனால், திரிஷாவை ஃபிளைட்டில் அழைத்துச் சென்று ஃபிளைட்டிலேயே கொண்டு வந்து சேர்த்து விட்டனர்.' என்று தெரிவித்து இருந்தார்.
இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறிய நிலையில், இது பற்றி நடிகை திரிஷா பேசிய போது, "மன்சூர் அலிகான் என்னைப் பற்றி மிகவும் அருவருப்பாக கருத்து தெரிவித்து இருந்த வீடியோவை பார்த்தேன். மரியாதை குறைவாகவும், பாலியல் ரீதியாக கேவலமான எண்ணத்துடனும் பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதுவரை அவருடன் நடிக்கவில்லை என்பதை நினைத்து நிம்மதியாக உணர்கிறேன். இனியும் அவருடன் நடிக்க மாட்டேன். இவரைப் போன்றவர்கள் அனைவரும் மனித இனத்திற்கு கெட்ட பெயரை வாங்கி கொடுக்கின்றனர்." என்று கூறியுள்ளார்.