#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
ஆபாச இணையத்தில் பகுதி நேர வேலை; இலட்சங்களில் சம்பாதிக்கும் ஆசிரியை பணிநீக்கம்.!

இத்தாலி நாட்டில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றி வருபவர் 29 வயதுடைய எலோனா மரகா. அறிவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ள எலோனா, 5 ஆண்டுகளாக கத்தோலிக்க தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார்.
இதையும் படிங்க: மடியில் கொட்டிய டீ.. ரூ.431 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.!
இதனிடையே, ஆபாச இணையத்தளத்தில் ஆசிரியை பகுதிநேர மாடலாகவும் வேலை பார்த்து வருகிறார். இந்த விஷயம் பள்ளியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
துறைரீதியான நடவடிக்கை
இதனால் ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து ஆசிரியை கூறுகையில், பள்ளியில் கிடைக்கும் சம்பளம் 1200 யூரோ (ரூ.1 இலட்சம்) எனக்கு போதவில்லை.
இதையும் படிங்க: பதின்ம வயது மாணவருடன் உடலுறவு: சர்ச்சையில் சிக்கிய பெண் அமைச்சர் ராஜினாமா.!
பகுதி நேரமாக வேலை தேடியபோது, எனக்கு தெரிந்த செயலை செய்து சம்பாதிக்கிறேன். குழந்தைகளுக்கு பாடம் எடுக்க எனக்கு பிடிக்கும். அங்கு நான் சரியாகத்தான் நடக்கிறேன். கூடுதல் சம்பளத்துக்காக வேறொரு வேலை செய்கிறேன். நான் யாரையும் சென்று துன்புறுத்தவில்லை, ஏமாற்றவில்லை" என கூறினார்.