விரைவில் வெள்ளை மாளிகைக்கு வரும் சுனிதா & புட்ச்.. அதிபர் டிரம்ப் கொடுக்கும் பரிசு.! 



US President Trump about Sunita Williams Special Allowance 

 

அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் 8 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணம் மேற்கொண்டனர். பின் 286 நாட்கள் கழித்து, நீண்ட போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டனர். 

பூமிக்கு திரும்பினர்.

எலான் மஸ்க்-கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சுனிதா, புட்ச் உட்பட 4 பேர் குழுவை மீட்டு பூமிக்கு கொண்டு வந்தது. 45 நாட்கள் இவர்கள் சிகிச்சையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நலமுடன் இருக்கின்றனர். விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி இருப்பதால், அவர்களின் எலும்பு மற்றும் தசை வலுவிழந்து காணப்படுகிறது. 

இதையும் படிங்க: விண்ணில் பாய்ந்தது பால்கான் 9 டிராகன்; பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.!

Donald trump

விரைவில் பரிசு

அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் சுனிதா மற்றும் புட்ச் ஆகியோரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து கௌரவிக்கப்படும் என கூறிய அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இருவரின் சிறப்பு ஊக்கத்தொகை குறைந்த விஷயம் எனக்கு தெரியாது.அவர்களுக்கான ஊக்கத்தொகை எனது சொந்த பணத்தில் இருந்து கொடுக்கப்படும் " என தெரிவித்தார். 

இதையும் படிங்க: சென்னை: பிஐஎஸ் முத்திரை இல்லாத பொருட்கள் விற்பனை? அமேசான், பிளிப்கார்ட் குடோனில் ரூ.36 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்.!