#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லியோ திரைப்படத்தால் எகிறிய மார்கெட்.. சம்பளத்தை உயர்த்திய திரிஷா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். முதன் முதலில் 'ஜோடி' திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார்.
இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். விக்ரம் நடிப்பில் வெளியான சாமி, விஜய் நடிப்பில் வெளியான கில்லி போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இப்படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைந்தன.
இப்படங்களுக்குப் பின்பு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இவ்வாறு பத்து ஆண்டுகளாக தனது திரை பயணத்தை கடந்து வந்துள்ளார் திரிஷா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப் பெரும் வெற்றி அடைந்து திரிஷாவின் நடிப்பு பாராட்டை பெற்றது.
இப்படத்திற்கு பின்பு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'லியோ' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக த்ரிஷா 12 கோடி வரை சம்பளம் வாங்கியதாகவும் இப்படத்திற்கு பின் நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் சம்பளத்தை உயர்த்த விருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.