மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேரதிர்ச்சி! பிரபல மெட்டி ஒலி சீரியல் நடிகை திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான மெட்டி ஒலி சீரியலில் நடித்த உமாமகேஸ்வரி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
சன் தொலைக்காட்சியில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் மெட்டிஒலி. இந்த தொடர் அனைவராலும் பெருமளவில் விரும்பி பார்க்கப்பட்டது. மெட்டி ஒலி சீரியலின் பாடல் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக மனதை கவர்ந்துள்ளது.
இந்த சீரியலை இயக்குனர் திருமுருகன் இயக்கியுள்ளார். மேலும் அந்த தொடரில் அவர் கோபி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அத்தகைய கோபி கதாபாத்திரத்திற்கு ஜோடியாக விஜி என்ற கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகை உமா மகேஸ்வரி. மெட்டி ஒலி தொடரில் அவரது நடிப்பு பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது 40 வயதாகும் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு காலமாகியுள்ளார். அவரது மறைவு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.