மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மா, தங்கச்சிகிட்ட போய் சொல்லு - அங்கங்கள் தெரியும் உடை குறித்து கமெண்டடித்த பத்திரிக்கையாளரிடம் பாய்ந்த நடிகை..!!
பாலிவுட்டில் Bade Bhaiyya Ki Dulhania என்ற டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் உர்ஃபி ஜாவத். இவர் பல சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இதன் பின் பிக்பாஸ் ஓடிடி சீசன் 1-ல் கலந்துகொண்ட இவர், முதல் 8 நாட்களிலேயே எவிக்டாகி வெளியேறினார்.
இதன்பின் கவர்ச்சியை ஆயுதமாகக் கொண்டு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து வருவார். சில நேரங்களில் இவர் அணியும் உடைகள் அனைவரையும் எரிச்சலாக்கும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும் படுமோசமாக இருக்கும்.
இந்த நிலையில் பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றுக்கு பச்சை நிற ஹுடி போன்ற உடையை அணிந்து உள்ளாடை அணியாமல் தலையில் மாட்டியபடி சென்றுள்ளார்m இது அரங்கத்தில் இருக்கும் அனைவரையும் அதிரவைக்கும் அளவிற்கு மிகவும் மோசமான உடையாக இருந்தது.
இதனை கண்ட பத்திரிக்கையாளர் ஒருவர், "மோசமான உடையாய் இருக்கே.. இப்படியா நிகழ்ச்சிக்கு போட்டுட்டு வருவது?" என்று கேட்கவே, கோபமற்ற நடிகை உர்ஃபி "நான் எப்போதாவது உங்களைப் போன்ற பத்திரிகையாளர்களையோ, புகைப்பட கலைஞர்களையோ மோசமாக பேசியுள்ளேனா? என்னை பார்த்து எப்படி மோசமான கமெண்டை சொல்லலாம்" என்றார்.
அத்துடன் சொன்னவர் யார் என்று தெரியாததால், அங்கிருந்த அனைவரையும் பார்த்து கோபத்தில் கத்தியுள்ளார். மேலும் "மற்றொரு முறை என் உடையைப் பற்றி யாரேனும் கமெண்ட் செய்தால், அப்படி ஏதும் கருத்து இருந்தால், அதை உங்களது அம்மா கிட்ட அல்லது தங்கச்சி கிட்ட போய் சொல்லுங்க" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகியதை தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.