திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"விஜய்க்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க" பிரபல நடிகையின் வைரலாகும் பேச்சு..
சின்னத்திரையில் சீரியலின் மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்தவர் வாணி போஜன். முதன் முதலில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தெய்வமகள் சீரியலின் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார். முதல் சீரியலிலேயே பிரபலமடைந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதனை அடுத்து சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் படங்களில் கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் வாணி போஜன். இவ்வாறு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் வாணி போஜன், நடிகர் விஜயின் அரசியல் வருகையை குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது வாணி போஜன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது செய்தியாளர்கள் நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த வாணி போஜன், "விஜய்க்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க வருங்காலத்தில் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். தனக்கும் அரசியலில் வருவதற்கு ஆசை இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் பிரபலமான நடிகராக இருந்த விஜய் தற்போது அரசியலில் நுழைந்திருப்பதை பல திரை பிரபலங்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்து வரும் நிலையில், வாணி போஜன் விஜயை குறித்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. வாணி போஜனிற்க்கும் அரசியல் ஆசை இருக்கிறது என்று கூறியதால் விஜயின் அரசியல் கட்சியில் சேரப் போகிறாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.