#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அவ மனசெல்லாம் இங்கதான் இருக்கும் - இளைய மகளை பிரிந்து வாடும் வனிதா..! என்ன கூறியுள்ளார் பாருங்க?..!
தமிழில் நடிகர் விஜய் நடித்த "சந்திரலேகா" என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை வனிதா. இவர் நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் - மஞ்சுளா ஆகியோரின் மகளாவார். இவர் தமிழில் சில படங்களிலும் நடித்தார். இதையடுத்து குடும்ப பிரச்சனையின் காரணமாக வனிதாவிற்கு 2 முறை விவாகரத்து ஏற்பட்டது.
அது மட்டுமல்லாமல் தந்தையுடன் பிரச்சினை காரணமாக தனது இரண்டு மகளுடன் தனியாகவே வசித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டுக்கொடுக்காமல் அனைத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும் நடிப்பை தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவரது இளைய மகள் ஜெயனிதா வீடியோக்களிலோ அல்லது பொதுஇடங்களிலோ காட்டப்படுவதில்லை என்று பலரும் கேட்டிருந்தார்கள். அத்துடன் நடிகை வனிதா தனது இளையமகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகியுள்ளது.
இது குறித்து பேட்டி ஒன்றில் வனிதா பேசியபோது, " தற்போது எனது இளைய மகள் ஹைதராபாத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் அவரது அப்பாவுடன் இருக்கிறாள். சமீபத்தில் கூட அவரை சென்று பார்த்துவிட்டு தான் வந்தேன்.
அவள் மனசெல்லாம் இங்குதான் இருக்கும். நான் தற்போது பிஸியாக இருக்கிறேன். இந்த சமயத்தில் கண்டிப்பாக அவளுடன் யாராவது இருக்க வேண்டும். அங்கு அவள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்று நம்புகிறேன்" என கூறியுள்ளார்.
#Vanitha About Her Second Daughter pic.twitter.com/ViSDykqTvI
— chettyrajubhai (@chettyrajubhai) September 25, 2022