விறகு சேகரிக்க சென்றபோது சோகம்; முதியவர் காட்டு யானை தாக்கி மரணம்.!



Nilgiris ManDies Elephant Attack 

 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர், இங்கோ நகரில் வசித்து வருபவர் கணேசன் (வயது 65). இவரின் மனைவி காந்திமதி (வயது 60). சம்பவத்தன்று தம்பதிகள் இருவரும் பந்தலூர், தேயிலை தோட்டத்தில் உள்ள வனப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்றனர். 

காட்டு யானை தாக்கியது

அப்போது, அங்கு இருந்த காட்டு யானை இருவரையும் தாக்கிய நிலையில், தம்பதிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு விரைந்து இருவரையும் மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சரின் கார் மீது மோதி சோகம்; இருசக்கர வாகன ஓட்டி பலி.!

Nilgiris

பின் மேல் சிகிச்சைக்காக ஒட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து கோவைக்கு கணேசன் அனுப்பி வைக்கப்பட்டார். கோவை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.   

இந்த விஷயம் குறித்து தேவாலா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: தலைக்கவசம் அணியாததால் விபரீதம்.. நிலைதடுமாறி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் மரணம்.!