திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சுலபம்லாம் இல்ல.. பல அவமானங்களை சந்தித்தேன்., ஆனாலும் பின்வாங்கல - நடிகை வரலட்சுமியின் கடிதம் வைரல்..!
தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது தெலுங்கிலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இவரது கைவசம் நிறையபடங்கள் உள்ள நிலையில், இவர் நடித்த 'கிராக்', 'நந்தி' உள்ளிட்ட இரண்டு படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.
இந்நிலையில் அவர் தனது திரையுலக பயணம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஒரு முக்கிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில், "பத்து ஆண்டுகளில் என் திரையுலக பயணம் சுலபமாக இல்லை.
நான் பல அவமானங்களை சந்தித்தாலும் பின்வாங்கவில்லை. இதுவரையிலும் 45 படங்களில் நடித்து என்னை நிரூபித்துள்ளேன். என்னை நிராகரித்த அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.