மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவகாசி படத்தில் விஜய்யின் சிறு வயது தங்கையாக நடித்த இந்த பாப்பா யார் தெரியுதா? அட.. அந்த ஹீரோயினேதான்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் குடும்ப, மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கென நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய் ஏராளமான தங்கை சென்டிமென்ட் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவ்வாறு அவர் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான திரைப்படம்தான் சிவகாசி.
பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் குடும்ப, அம்மா மற்றும் தங்கை சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருக்கும். சிவகாசி படம் வெளியாகி அனைவர் மத்தியிலும் மாபெரும் வரவேற்பு பெற்றிருந்தது. இப்படத்தில் விஜய் தனது குடும்பத்துடன் இருப்பது போன்ற போட்டோ காண்பிக்கப்படும். அதில் விஜய்யின் சிறுவயது தங்கையாக நடித்திருந்தவர் நடிகை வெண்பாவாம்.
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள வெண்பா தற்போது பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் காதல் கசக்குதய்யா, அசோக் தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த மாய நதி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் பல படங்களில் சிறு சிறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.