மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசைக்கு இணங்காகதால் என்னை அடித்தார்கள்.. மனக்குமுறலை வெளிப்படுத்திய விசித்ரா.!
90களில் தென்னிந்திய சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்தவர் விசித்ரா. இதனிடையே திடீரென சினிமாவை விட்டு விலகிய நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மீண்டும் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இந்த நிலையில் தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகள் போட்டியாராக கலந்து கொண்டுள்ளார். தற்போது அவருடைய உண்மையான குணத்துக்கு நிறைய உருவாகியுள்ளனர். அதன் மூலம் சமூக வலைதளங்களில் விசித்ராவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவுகள் குவியத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த மோசமான சம்பவம் குறித்து பேசியுள்ளனர். அதில் விசித்திரா சினிமாவில் தனக்கு நடந்த கொடூரமான சம்பவத்தை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், 'தான் 20 வருடங்களுக்கு முன்பு நடித்த ஒரு தெலுங்கு படத்தில் அந்த படத்தின் ஹீரோ என்னை ஆசைக்கு இணங்கும்படி அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. இதனால் அடுத்த நாள் அந்த படத்தின் சண்டை இயக்குனர் என்னை அடித்து விட்டார். அதனால் தான் நான் சினிமாவில் விட்டு விலகினேன்' என கூறியுள்ளார்.
தற்போது இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில் விசித்திரா குறிப்பிடும் நடிகர், பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தான் என்றும் அந்த சண்டை பயிற்சியாளர் விஜய் தான் என்றும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.