தனது கர்ப்பம் குறித்து நடிகை எமி ஜாக்சன் கூறிய அதிர்ச்சி காரணம்! ஷாக் ஆன ரசிகர்கள்!
ஆங்கிலம் கலந்த தமிழில் மதராச பட்டினம் என்ற ஒரே படத்தில் தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் இங்கிலாந்தை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன். இயக்குனர் AL விஜய் இவரை தேடி பிடித்து மதராசபட்டினம் படத்தில் நடிக்க வைத்தார். முதல் படமே இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தது.
அதன் பயனாக தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களின் படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பானதமானார் எமி ஜாக்சன். கடைசியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 2 . 0 படத்தில் ரோபோ வேடத்தில் நடித்து அசத்தினார்.
இந்நிலையில் நீண்ட காலமாக எமி காதலித்து வந்த அவரது காதலருக்கு, எமிக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்தது. இன்னும் திருமணம் நடைபெறாத நிலையில் எமி கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
இது பற்றி பேசியுள்ள எமி ஜாக்சன், “உண்மையில் நான் கர்பமாக இருப்பது எனக்கே தெரியாது. 6 வாரங்கள் கழித்து தான் தெரிந்தது. இலங்கை, இந்தியா மற்றும் நியூ யார்க் என தொடர்ந்து உலகத்தை சுற்றிக்கொண்டிருந்தேன். தற்போது தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் எமி.