மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திமுக அரசை.. படுமோசமாக விமர்சித்த பிரபல நடிகை.! வைரலாகும் பதிவு.!
சென்னையில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாகவே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் கூட வெளியில் செல்ல முடியாமல், அடிப்படை தேவைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுவாக அடிக்கடி அரசாங்கம் பற்றிய விமர்சனம் செய்யும் நடிகை கஸ்தூரி மற்றும் நடிகர் விஷால் உள்ளிட்ட பலரும் தற்போது வெள்ள நிவாரண பணிகளில் அரசாங்கத்தின் குறைகளை வெளிப்படையாக தெரிவித்து இருக்கின்றனர்.
அந்த வகையில் அருவி பட நடிகை அதிதி பாலன் அரசாங்கம் குறித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த பதிவில், "ஆர்.கே.நகருக்கு சென்றபோது மழை நீரை வெளியேற்ற ஏரியாவுக்குள் பம்ப் செய்து கொண்டு இருந்தனர். அதில் இரு விலங்குகள் இறந்து போய் மிதந்து கொண்டு இருந்தது.
எனது உறவினர்களை மீட்க இந்த தண்ணீரில் நான் நடந்து கொண்டு இருந்தேன். அப்போது, முதல்வரின் காண்வாய் வருகிறது என்று கூறி அங்கு நிறுத்தப்பட்டிருந்த என்னுடைய காரை எடுக்க வேண்டி நிர்பந்தப்படுத்தினார்கள். ஒரே ஒரு வி.ஐ.பி-யை 6 வீரர்கள் ஒரு மிதவை படகில் மீட்டுச் சென்றனர். ஆனால், பொதுமக்கள் இங்கே அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அரசாங்கம் எங்கே.?" என்று தெரிவித்துள்ளார்.