மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பக்கத்தில் நடிகர் கார்த்தி! இயக்குனர் ஷங்கரின் மகள் செய்த காரியத்தை பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ!!
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இப்படத்தில் ஹீரோயினாக, கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விருமன் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அதில் கார்த்தி, அதிதி ஷங்கர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, சூர்யா, இயக்குனர் முத்தையா, இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அப்பொழுது நிகழ்ச்சியில் சூர்யாவின் பெயரை தொகுப்பாளர் கூறியதும் ரசிகர்கள் அனைவரும் ரோலக்ஸ் ரோலக்ஸ் என கத்தி ஆரவாரம் செய்துள்ளனர். மேலும் நடிகை அதிதி சங்கரும் உற்சாகத்தில் ரோலக்ஸ் ரோலக்ஸ் என கத்தியுள்ளார். அப்பொழுது அவரது அருகில் அமர்ந்திருந்த நடிகர் கார்த்தி ஸ்மைல் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
.@AditiShankarofl Cheering Rolex Rolex 😂❤️🔥 So Cute laa @Suriya_offl#VaadiVaasal #Vanangaan pic.twitter.com/H7DGAskshQ
— R O L E X സൂര്യ 45 (@Tommm_Jerryy) August 3, 2022