திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இவங்கதான் ஆர்யா நடிக்கும் காதர் பாட்ஷா படத்தில் ஹேர் ஸ்டைலிஷ்டா.. இவ்வளவு அழகான ஹேர் ஸ்டைலிஷ்ட் பாத்திருக்க மாட்டீங்க.?
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துள்ளார். பெண்களின் கனவு கண்ணன் என்று சொல்லும் அளவிற்கு தனது நடிப்பு திறமையாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள் சாயிஷா, ஆர்யா தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் முத்தையா இயக்கத்தில் "காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்" திரைப்படத்தில் சித்தி இதானானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆர்யாவின் சமூக வலைத்தளம் இன்ஸ்டாகிராமில், வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் காதர்பாட்ஷா படத்தில் என்னுடைய ஹேர் ஸ்டைலிஸ்ட் இவங்க தான் என்று தனது குழந்தையை குறிப்பிட்டுள்ளார்.