#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு இவர்தான்! பிரபல நடிகை ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். படத்தின் கதாபாத்திரத்திற்காக தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து நடிக்க கூடியவர். நடித்தால் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்லும் கதாநாயகிகள் மத்தியில் கதைக்கா எந்தஒரு கதாபாத்திரத்தையும் ஏற்று நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார், மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மேலும் இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர், உங்களுக்கு தமிழ் சினிமாவில் பிடித்த நடிகர் யார் என கேட்டார்.
அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், எனக்கு எப்பவுமே முதலில் ரஜினி சார் தான். அதன் பின் தளபதி விஜய் தான் என கூடியிருந்த அனைவருக்கும் முன் கூறினார். இதனால் அக்கூட்டத்திலிருந்து பயங்கரமான கரகோஷம் எழுத்தது.