மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆல்யா மானசா- சஞ்சீவ் குடும்பத்தையே மகிழ்ச்சியில் மூழ்கடித்த அந்த அழகிய தருணம்! வைரலாகும் இதுவரை பார்த்திராத கியூட் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இத்தொடரின் மூலம் இவர்களுக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
ராஜாராணி தொடரில் கணவன், மனைவியாக நடித்து வந்த இருவரும் நிஜத்திலும் காதலிக்க தொடங்கி திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சிறந்த காதல் ஜோடியாக வாழ்ந்து வரும் இருவருக்கும் கடந்த ஆண்டு ஐலா சையத் என்ற பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ஆலியா அவ்வப்போது தனது மற்றும் தனது குழந்தையின் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது தனது குழந்தை ஐலா பிறந்த முதல் நாள் வீடியோவை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.