மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாஷிகாவுடன் மட்டும் சேர்ந்து நடிக்கமாட்டேன்.! வெளிப்படையாக போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்!! இதுதான் காரணமா??
தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா. அதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றுள்ளார்.இவர் அந்த நிகழ்ச்சியில் செய்த சில செயல்கள் சர்ச்சையாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
ஆரம்பத்தில் ஆடல், பாடல் என குதூகலமாக இருந்த அவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர். ஆனால் நாளடைவில் இவரது அளவுக்கு மிஞ்சிய கோபத்தால் மக்களின் வெறுப்பை பெருமளவில் சம்பாதித்தார். இதில் சில விசயங்களால் அவர் மீது பலருக்கும் அதிருப்தி எழுந்தது. ஆனாலும் அவர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியநிலையில் ஐஸ்வர்யா தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் தன்னுடன் நெருக்கமாக இருந்து உயிர் தோழியான யாஷிகாவுடன் ஊர் சுற்றிவந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா தத்தாவிடம், நீங்களும், யாஷிகாவும் இணைந்து நடிப்பீர்களா என கேட்டதற்கு, யாஷிகா நடிச்ச ஜாம்பி பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
ரொம்ப கஷ்டப்பட்டு இந்தளவுக்கு வந்திருக்கா. மேலும் நல்ல கதைகள் வந்தா நாம சேர்ந்து நடிக்கலாம் என நினைத்திருந்தோம்.
ஆனால் அவ்வாறு இருவரும் ஒரே படத்துல நடிக்கும் போது, போட்டி போட்டு நடிக்க வேண்டியிருக்கும். அது எங்களது நட்பை பாதிக்கலாம். அதனால் இப்பொழுது அது வேண்டாம் என நினைக்கிறேன். நாங்கள் எப்பொழுதும் நல்ல தோழிகளா இருக்க விரும்புறோம் என கூறியுள்ளார்.