மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட்டகாசமான கிளாமர் உடையில் ஐஸ்வர்யா லட்சுமி!
மலையாளத் திரை உலகைச் சார்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் சமீபத்தில் நடித்திருந்த மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இவரது நடிப்பு இந்த படத்தில் வெகுவாக பாராட்டப்பட்டது .
2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா" என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் 2014 ஆம் ஆண்டு முதல் மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார் . தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படமே இவரை அதிகமான தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்தது என்று கூறலாம். இவர் ஒரு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தன்னுடைய போட்டோ ஷீட் குறித்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது வழக்கம் இந்நிலையில் தனது புதிய போட்டோ சூட்டின் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்க செய்திருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
சில மாதங்களுக்கு முன்பு இவர் விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடித்த கட்டா குஸ்தி என்ற திரைப்படம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது . மேலும் இந்தப் படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி இவர் நடித்திருக்கும்பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.