மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்படி போடு.. மகனுக்காக, ஐஸ்வர்யா போட்ட அசத்தலான திட்டம்! என்னனு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து தனுஷ் அவரது பட வேலைகளில் பிசியாக உள்ளார் அவரை போலவே ஐஸ்வர்யாவும் தனது ஆல்பம் பாடல் இயக்குவதில் மும்முரமாக இருந்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ராக் வித் ராஜா என்ற லைவ் கார்ன்செர்ட்டில் தனுஷ் தனது இரு மகன்களுடன் கலந்து கொண்டார்.
அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. அதாவது ஐஸ்வர்யா தனது தற்போது 15 வயதாகும் மூத்த மகன் யாத்ராவை ஹீரோவாக வைத்து படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.