#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இது தொடரனும்! சவாலை அசத்தலாக செய்து முடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! ரசிகர்களுக்கும் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!
தமிழ் சினிமாவில் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனைத் தொடர்ந்து அவர் தர்மதுரை, வடசென்னை, செக்க சிவந்த வானம், கனா, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் கதாநாயகியாகதான் நடிப்பேன் என்று இல்லாமல், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளார்.
இந்நிலையில் சமீப காலமாக பசுமை இந்தியா சவாலை ஏற்று பல பிரபலங்களும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயும் இந்த சவாலை ஏற்று மூன்று மரக்கன்றுகளை நட்டுள்ளார். இத்தகைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர் இதனை தனது ரசிகர்களும் மேற்கொள்ள வேண்டும். இந்த சங்கிலித் தொடர வேண்டுமென கோரிக்கை விடுத்து பதிவிட்டுள்ளார்.