மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முக்கிய நாளில் தமிழக ஆளுநரின் கையால் விருது பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா.! அதுவும் என்ன விருது தெரியுமா??
உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது அம்மாக்களுக்கு வாழ்த்து கூறி இணையத்தில் பல நெகிழ்ச்சியான பதிவுகளை வெளியிட்டனர். மேலும் கிண்டி கவர்னர் மாளிகையிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
அப்பொழுது பல்வேறு துறைகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்த பல சாதனையாளர்களின் அம்மாக்களை கௌரவப்படுத்தும் வகையில் அன்னையர் தின சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் வறுமையான சூழ்நிலையிலும் தனது மகளை வளர்த்து, சிறந்த நடிகையாக்கிய, தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் தாய் நாகமணி அம்மையாருக்கு சிறந்த அன்னைக்கான விருது வழங்கப்பட்டது.
விருதினை ஆளுநர் ஆர்.என் ரவியும் அவரது மனைவி லட்சுமி ரவியும் வழங்கியுள்ளனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவின் அம்மா நாகலட்சுமி, பாரா கிரிக்கெட் ஒலிம்பிக் வீரர் பொன்ராஜின் அம்மா ஞானசுந்தரி, திருநங்கை கிரேஸ் பானுவின் அம்மா ஹீனா உள்ளிட்ட 8 பேருக்கு சிறந்த அன்னைக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.