திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நேரடியாக டிவியில் ரிலீஸாகவுள்ள பிரபல முன்னணி நடிகையின் திகில் திரைப்படம்! வெளிவந்த புதிய தகவல்!!
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ரம்மி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதனைத் தொடர்ந்து அவர் காக்காமுட்டை, தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் கைவசம் திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ் போன்ற படங்கள் உள்ளன.
ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கத்தில் உருவான திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படம் பூமிகா. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் பூமிகா திரைப்படத்தை நேரடியாக டிவியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் படம் வரும் ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.