திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிக்பாஸ் போனா அப்டி மாறிடுவாங்களோ..! தன் அண்ணனால் குழப்பத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். அவர் தற்போது பா.கின்ஸ்லின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டிரைவர் ஜமுனா' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. இந்நிலையில் டிரைவர் ஜமுனா திரைப்படம் இன்று வெளியாகவிருந்த நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டியில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அவரது அண்ணன் மணிகண்டாவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், புஜ்ஜி
உண்மையாவே ஒரு ஃபன்னான பர்சன்தான். ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டுல ரொம்பவே சீரியஸா இருக்கான். அது ஏன் தெரியலை. இரண்டு நாளைக்கு முன்னாடி கூட சண்டை போட்டுருக்கான். ஆனால், அது புஜ்ஜியோட உண்மையான கேரக்டர் இல்லை. ஒருவேளை பிக்பாஸ் போனா அப்படி மாறிடுவாங்களோ. இல்லை அவன் வேணும்னே பண்றானா என குழப்பமாக இருக்கு என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.