திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எனது பலமே அவர்கள்தான்.! அதனால் நிறைய இழந்திருக்கிறேன்.! பளீச்சென மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உருவாக்கியுள்ள திரைப்படம் சொப்பன சுந்தரி. இந்த திரைப்படத்தை லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி சார்லஸ் இயக்கியுள்ளார். இதில் லட்சுமி பிரியா, தீபா, ரெடின் கிங்ஸ்லீ, மைம் கோபி பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சொப்பன சுந்தரி திரைப்படத்தை ஹம்சினி என்டர்டைன்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படம் திரில்லர் கலந்த காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் சொப்பன சுந்தரி படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது.
அப்பொழுது பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது, கதையின் நாயகியாக நான் ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு எனது இயக்குனர்கள்தான் பலமாக உள்ளனர். கனா படத்தை எனக்கு வழங்கிய இயக்குனர் அருண்ராஜா, க/பெ ரணசிங்கம் படத்தை வழங்கிய இயக்குனர் விருமாண்டி, சொப்பன சுந்தரி படத்தின் இயக்குனர் சார்லஸ் இவர்கள்தான் காரணம். மேலும் நடிகர்கள், நடிகைகள் ஒரு நட்சத்திர அந்தஸ்தை அடைந்து சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பதற்கு அடித்தளமாக இயக்குனர்கள்தான் உள்ளனர்.
இயக்குனர் சார்லஸ் முதலில் என்னை இந்த படத்தில் நடிக்க வைக்கமாட்டேன் என கோபமாக கூறிவிட்டார். ஆனால் அதன்பின் நான் அழைத்தவுடன் அவர் வருகை தந்தார். அவரது கோபம் அவ்வளவுதான். கோபத்தால் எப்போதும் இழப்புதான் ஏற்படும். எனது வாழ்க்கையில் நான் நிறைய கோபப்பட்டுள்ளேன். அதனால் நிறையவே இழந்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.