மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லால் சலாம் சூட்டிங்கில் சூப்பர் ஸ்டார்... புதிய அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.!
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் விரைவிலேயே ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியிடும் நிகழ்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதற்கான சூட்டிங் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் ரஜினிகாந்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாக இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் ஐஸ்வர்யா. தனது தந்தை மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் அவர் உங்களை வைத்து படத்தை இயக்குவது அசாத்தியமானது. நீங்கள் ஒரு மந்திரவாதி என குறிப்பிட்டு அந்தப் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.