திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திரையரங்கில் கதறி அழுத ஐஸ்வர்யா லட்சுமி.. என்ன நடந்தது.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வருகிறார்.
தமிழில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமியின் படங்களான கட்டாகுஸ்தி, பொன்னியின் செல்வன், ஜகமே தந்திரம் போன்ற திரைப்படங்களில் இவரின் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.
இது போன்ற நிலையில், ஜியோ பேபி இயக்கத்தில் மம்முட்டி, ஜோதிகா போன்றவர்கள் நடிப்பில் ஓரினச்சேர்க்கை காதல் கதைகளை கொண்ட திரைப்படம் தான் காதல் தி கோர். இப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது.
மேலும் திரையரங்கில் வெளியானதையடுத்து ரசிகர்கள் பலரும் பாராட்டி வந்த நிலையில் திரைத்துறையினரும் இந்த படத்தை பெருமையாக பேசி வந்தனர். தற்போது ஐஸ்வர்யா லட்சுமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் படத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் கதறி அழுதேன். மிகவும் சிறந்த படைப்பு என்று பாராட்டி இருக்கிறார்.